பெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருமாலின் தச(பத்து) அவதாரங்கள்

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால், பூலோகத்தைக் காப்பதற்காக ஒன்பது முறை அவதரித்துள்ளார். 10-வது அவதாரமாக கல்கி என்ற அவதாரத்தை அவர் எடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த தசாவதாரங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

01 மச்ச அவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் இது. மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் தோன்றி மகாவிஷ்ணு, வேதங்களை அபகரித்துக் கொண்டு போய், கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றார்.


02 கூர்ம அவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரமே கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து, பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக புராணங்கள் கூறுகிறது.


03 வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால், வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றார். பின்னர் பூமியை தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.


04 நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் இருந்து சிங்க முகத்துடன் வெளிப்பட்ட திருமால், இரண்யகசிபுவை வதம் செய்தார். இந்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.


05 வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க, பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.


06 பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக பிறந்ததே பரசுராம அவதாரம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம்.


07 ராம அவதாரம்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். மனிதனின் இன்ப துன்பங்களை அனுபவித்து, மனிதர்களுக்கு முன்னோடியாக விளங்கிய அவதாரம் இது.


08 பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகவும் கூறுவர்.


09 கிருஷ்ண அவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில், கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக திருமால் விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.


10 கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் இந்த கல்கி அவதாரத்தை எடுத்து, உலக உயிர்களை முக்தி பெறச் செய்வார் என்று புராணங்கள் கூறுகின்றன.


தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| -----  ஓம் நமோ பகவதே வாசுதேவாய  ----- ||

செவ்வாய், 13 மார்ச், 2018

ஷட்திலா ஏகாதசி (மாசி மாதம் கிருஷ்ண பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

மாசி மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை ஷட்திலா ஏகாதசியாக கொண்டாடுவர். ஷட்திலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.


மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாயிலாக கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி "மதுசூதனா தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகள் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே ஜகதீஸ்வரா, மற்ற ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகளையும் கேட்டு மகிழ என் மனம் விழைகிறது. தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான். 

இதைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் "பார்த்தா! இப்பொழுது மாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியக் கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்" என்று கூறலுற்றார். 

ஒரு சமயம் தாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் "முனிசிரேஷ்டரே! பூமியில் மனிதர்கள் மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை, குரோதம், பொறாமை, உணர்ச்சியின் உத்வேகம் மற்றும் அறிவின்மையின் வசப்பட்டு செய்கின்றனர். பின்னர் "ஐயோ! நான் எத்தகைய மாபாதகத்தை செய்து விட்டேன்" என மனம் வருந்துகின்றனர். 

"முனிசிரேஷ்டரே அத்தகைய மனம் வருந்தும் மனிதர்கள் நரகம் செல்லுவதிலிருந்து விடுபட ஏதேனும் உபாயம் உள்ளதா? தான, தர்மம் மோட்சப்பிராப்தியை அளிக்கும் என்றால் எவ்வித தானத்தின் புண்ணிய பிரபாவத்தால் அவர்கள் நரகம் அடைவதிலிருந்து விடுபட முடியும்? தயவு கூர்ந்து நல்வழியைத் தாங்கள் தான், அவர்களுக்கு கூறி அருள வேண்டும்." என்றார்.

புலஸ்த்ய ரிஷி "மஹாபாகா! இவ்வுலக வாழ் மக்கள் அனைவருக்கும் பயனை அளிக்கும் முக்கியமான, அர்த்தமுள்ள, கம்பீரமான கேள்வியை கேட்டுள்ளாய். உன் கேள்விக்கு பதிலாக, இந்திரன் முதலான தேவர்களும் கூட இதுவரை அறிந்திராத ரகசியத்தை அவசியம் கூற வேண்டி உள்ளது. கவனத்துடன் கேள். மாசி மாதம் அதிகாலையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்து சுத்தமாக இருப்பதுடன், இந்திரியங்களை உள்ளடக்கி, காமம், குரோதம், லோபம், மோகம், பொறாமை, அகங்காரம் இவற்றை விட்டொழித்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவை த்யானம் செய்ய வேண்டும். 

பூச நட்சத்திர தினத்தன்று பசுவின் சாணம் பூமியில் விழும் முன்பே சேமித்து, அதனுடன் பஞ்சு மற்றும் எள் சேர்த்து 108 பந்து உருண்டைகளாக செய்து வைத்தல் வேண்டும். மூல நட்சத்திரமும், ஏகாதசி திதியும் சேர்ந்து வரும் நன்நாளில் புண்ணியம் அளிக்கும் நற்கருமங்களை செய்ய வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாவிஷ்ணுவிற்கு விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்து, நாள் முழுதும் கீர்த்தனை, நாமஸ்மரணம் என்று ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று இரவு கண் விழித்து முன்பு செய்து வைத்திருக்கும் 108 பந்து உருண்டைகளை கொண்டு யாகம் செய்ய வேண்டும்.. மறுநாள் தூப, தீபம், நைவேத்யத்துடன் பகவான் விஷ்ணுவின் பூஜை செய்து கிச்சடியை நைவேத்யமாக அர்ப்பணிக்க வேண்டும். அன்று மஹாவிஷ்ணுவிற்கு பால்பேடா, தேங்காய், சீதாப்பழம், கொய்யாப்பழம், பூசணி, (இவை கிடைக்காதபட்சத்தில் பாக்கு) இவற்றை கீழ்க்கண்ட பிரார்த்தனையுடன் அர்க்யம் கொடுத்தல் வேண்டும்.

அர்க்ய பிரார்த்தனை: "பகவான் தாங்கள் திக்கற்றவர்களுக்கு புகலிடம் அளிப்பவர். இவ்வுலக மாயையில் மூழ்கி இருப்பவர்களை மீட்பவர். புண்டரீகாக்ஷா, தாமரை மலரை ஒத்த கண்களை கொண்டவரே! விஸ்வவிதாதா (உலகைப் படைத்தவரே! சுப்ரமண்யா!! ) நீங்கள் தேவி லக்ஷ்மீ சகிதம் அடியேன் அளிக்கும் சிறிய அர்க்யத்தை ஏற்க வேண்டும்." அதற்குப் பிறகு பிராம்மணருக்கு ஜலம் நிரம்பிய கும்ப கலசம், குடை, காலணி, அங்கவஸ்திரத்துடன் உடை, எள் இவற்றை தானம் அளிக்க வேண்டும். முடிந்தால் பிராம்மணருக்கு பசுவுடன் எள் தானம் அளிப்பதும் மிகுந்த புண்ணியத்தை நல்கும். இப்படி எள் தானம் செய்ததின் அளவிற்கு ஏற்ப அத்தனை ஆயிரம் வருட காலம் ஸ்வர்க்கத்தில் வசிக்கும் பிராப்தியை பெறுவர். 

          01. எள் நிரம்பிய நீர் ஸ்நானம்  
          02. எள்ளினை உடம்பெங்கும் பூசிக் கொள்தல்
          03. எள் ஹோமம் (தில ஹோமம்)  
          04. எள்ளை உட்கொள்ளுதல்
          05. எள்ளை தானமாக பெறுதல் மற்றும்
          06. எள்ளை தானமாக அளித்தல் 

இப்படி ஆறு வகையான எள் பயன்பாடு சட்திலா (ஆறு வகையான எள்) என அழைக்கப்படுகிறது. இவ்வகை பயன்பாட்டால், அநேக பாபங்கள் விலகுகின்றன. என்று கூறிய புலஸ்திய ரிஷி, இப்பொழுது ஏகாதசி விரத கதையை கூறுகிறேன், கேள். என்றார். 

ஒரு நாள் நாரத முனி பகவான் விஷ்ணுவிடம் சட்திலா ஏகாதசியை பற்றி வினவினார், "பகவான்! தங்களுக்கு என்னுடைய அநேக கோடி நமஸ்காரங்கள். சட்திலா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணியம் என்ன? அதன் மஹிமை என்ன? தயவு செய்து கூறுங்கள்." என்றார்.

நாரத ரிஷியின் வேண்டுகோளைக் கேட்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு ஹே நாரதா! உண்மையில் நடந்த ஒரு சத்ய நிகழ்ச்சியை விவரிக்கிறேன். கவனத்துடன் கேள்.என்றார். பண்டைய காலத்தில் பூமியில் ஒரு பிராமண ஸ்திரீ வாழ்ந்து வந்தாள். அவள் எப்பொழுதும் விரதங்களை நியமத்துடனும், பக்தியுடனும் கடைபிடித்து வந்தாள். ஒரு சமயம் விரதத்தை ஒரு மாதம் வரை கடைபிடித்ததால், சரீரம் மிகவும் பலவீனமாயிற்று. அவள் பக்தியில் சிறந்து விளங்கினாள். பிராமணர்களுக்கும், கன்யைக‌ளுக்கும் தானங்களை, அவர்கள் மனமகிழ்ச்சி அடையும் அளவுக்குச் செய்தாள். சிறந்த புத்திமானாகவும் விளங்கினாள்.

தானம் பெற தகுதி வாய்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் வேண்டிய அளவு தானம் செய்தாலும், அவள் பக்தியின் ஒரு அம்சம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அது என்னவென்றால், தர்மங்களில் தலைசிறந்த அன்னதானத்தை பிராமணர்களுக்கோ அல்லது தேவர்களுக்கோ, அவள் ஒருபொழுதும் செய்ததில்லை. என் எண்ணமெல்லாம், பிராமண ஸ்திரீ சிரத்தையுடன் அனுஷ்டித்த விரதங்களின் பலனால் தன் சரீரத்தை பரிசுத்தமாக்கிக் கொண்டதால், அவளுக்கு விஷ்ணுலோகம் நிச்சயம் கிட்டும். ஆனால் அன்னதானத்தின் பலன் இல்லாமல் ஜீவிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அன்னதானம் ஆத்மாவிற்கு சாந்தியை அளிக்கக்கூடியது. ஆகவே அவள் வைகுண்ட வாழ்க்கையை எளிதாக்க இக்குறையை நீக்க எண்ணினேன். இந்த எண்ணத்துடன் பூலோகம் சென்று பிராமண ஸ்திரீயிடம் அன்னப்பிட்க்ஷை வேண்டி நின்றேன். 

பிராமண ஸ்திரீ "ஹே மஹாராஜரே! நீங்கள் எதற்காக வந்துள்ளீர்?" என்றாள். நானும் "பிட்க்ஷை வேண்டி வந்துள்ளேன்" என்றேன். அதைக் கேட்டு அவள் மணலால் ஆன ஒரு பிண்டத்தை தானமாக அளித்தாள். அதை வாங்கிக் கொண்டு நான் ஸ்வர்க்கத்திற்கு திரும்பி வந்து அவள் அளித்த மண் பிண்டத்தை வைத்து ஒரு அழகான வீடு அவளுக்காக அமைத்தேன். வீடு அழகாக அமைந்தது. ஆனால் வீட்டில் தான்யங்கள், இருக்கைகள், மற்ற எதுவும் இல்லாமல் அவள் அளித்த மண்னைப் போல் அமைந்து இருந்தது. சில காலம் கழித்து, அந்தப் பிராமண ஸ்திரீ மரணத்திற்குப் பிறகு ஸ்வர்க்கத்திற்கு வந்தாள். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவளுக்கு கிடைத்த இடத்தில் மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் அவ்வீட்டில் வேறு எதுவும் இல்லாமல் சூன்யத்துடன் இருந்தது. அதைக் கண்டு அவள் பயத்துடனும், கோபத்துடனும் என்னிடம் வந்து, "பகவான், அநேக விரதங்களை கடைப்பிடித்து உங்களுக்கு பூஜை செய்தேன். ஆனால் என் வீட்டில் வேறு எந்த வஸ்துக்களும் இல்லை. இதற்கு என்ன காரணம்.?" என்றாள்.

அதற்கு நான் "நீ உன் இல்லத்திற்குச் செல்வாயாக‌. அங்கு உன்னைக் காண தேவ ஸ்திரீகள் வருவர். அவர்கள் வரும் பொழுது, அவர்களிடம் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியம் மற்றும் பூஜை விதியைப் பற்றி கேட்கவும். அவர்கள் சொல்லும் வரை வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம்." என்றேன். பகவானின் வார்த்தைகளைக் கேட்டு அவள் வீட்டிற்கு திரும்பினாள். தேவ ஸ்திரீகள் அவளைக் காண வந்து வீட்டின் கதவுகளை திறக்க முற்பட்ட பொழுது பிராமண ஸ்திரீ அவர்களிடம், "நீங்கள் என்னைக் காண வேண்டும் என்றால், முதலில் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை கூறவும்." என்றாள்.

அவர்களில் ஒரு தேவ ஸ்திரீ "இது தான் உன் விருப்பம் என்றால், நான் உனக்கு சட்திலா ஏகாதசி விரதம் மற்றும் அதன் மஹாத்மியம், பூஜை விதி ஆகியவற்றைப் பற்றி சொல்கிறேன், கவனத்துடன் கேள்" என்றாள். அவள் சட்திலா ஏகாதசி மஹாத்மியத்தை கேட்டு முடித்தவுடன், பிராமண ஸ்திரீ வீட்டின் கதவுகளை திறந்தாள்.

தேவ ஸ்திரீகள் தாங்கள் எதிர்ப்பார்த்தபடி இல்லாது ஒரு பிராமண ஸ்திரீயை கண்டு மிகவும் வியந்தனர். அவளை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவளாகவும் வித்தியாசமானவளாகவும் கண்டு வியந்து சென்றனர். பிராமண ஸ்திரீயும் அந்த தேவஸ்திரீ கூறியபடி சட்திலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தாள். அதன் புண்ணிய பலனால் அவள் வீடு தனம், தான்யங்களால் நிரம்பி வழிந்தது.

"ஹே அர்ஜூனா, மனிதர்கள் அறியாமையை விட்டொழித்து சட்திலா ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் மனிதர்களின் நிரந்தர ஆரோக்கியத்தை பெறுவர். இதனால் அனைத்து பாபங்களும் அழியும்" என்று கூறி முடித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கதாசாரம்: இந்த விரதத்தினால் நமக்கு சரீர சுத்தி, ஆரோக்கியம் மட்டுமல்லாமல், அன்னம், எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம், தான்ய விருத்தியும் கிட்டுகிறது. இதனால் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ, அவை யாவும் மரணத்திற்குப் பிறகு நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தார்மீக கார்யங்களை அவற்றின் விதிப்படி செய்யும் பொழுது, கூடவே தானங்களையும் அவசியம் செய்ய வேண்டும். தான, தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக கார்யங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன்.

நன்றி : Kshetra Yaatra

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

திருமாலின் நூற்றியெட்டு போற்றி திருநாமங்கள்

ஏகாதசி மற்றும் திருவோண விரதமிருப்பவர்கள் இந்த 108 போற்றியை பாராயணம் செய்தால் எண்ணியது ஈடேறும்.


          01 ஓம் அன்பின் சுடரே போற்றி
          02 ஓம் அளவிலா அறமே போற்றி
          03 ஓம் அருட்கடலே போற்றி
          04 ஓம் அரவ சயனா போற்றி
          05 ஓம் அக்காரக்கனியே போற்றி

          06 ஓம் அரவிந்தலோசனா போற்றி
          07 ஓம் அச்சத மூர்த்தியே போற்றி
          08 ஓம் அற்புத லீலா போற்றி
          09 ஓம் அநாதரட்சகா போற்றி
          10 ஓம் அலர்மேல் மார்பா போற்றி

          11 ஓம் அலங்கார பிரியனே போற்றி
          12 ஓம் ஆதிநாராயணா போற்றி
          13 ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
          14 ஓம் ஆழ்வார் உயிரே போற்றி
          15 ஓம் ஆதிமூலமே போற்றி

          16 ஓம் ஆபத்து சகாயா போற்றி
          17 ஓம் ஆலிலை பாலகா போற்றி
          18 ஓம் ஆனையை காத்தாய் போற்றி
          19 ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
          20 ஓம் இன்னல் தீர்ப்பாய் போற்றி

          21 ஓம் இமையவர் தலைவா போற்றி
          22 ஓம் ஈகை நெஞ்சினாய் போற்றி
          23 ஓம் உலகமுண்ட வாயா போற்றி
          24 ஓம் உம்பர் கோமானே போற்றி
          25 ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

          26 ஓம் எட்டெழுத்தானே போற்றி
          27 ஓம் எழில்மிகு தேவா போற்றி
          28 ஓம் ஏழுமலையானே போற்றி
          29 ஓம் ஏழைப் பங்காளா போற்றி
          30 ஓம் ஒளிமணி வண்ணா போற்றி

          31 ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
          32 ஓம் கலியுக வரதனே போற்றி
          33 ஓம் கண் கண்ட தேவா போற்றி
          34 ஒம் கருட வாகனனே போற்றி
          35 ஓம் கல்யாண மூர்த்தியே போற்றி

          36 ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
          37 ஓம் கருட கொடியானே போற்றி
          38 ஓம் கமலக் கண்ணனே போற்றி
          39 ஒம் கஸ்துாரி திலகனே போற்றி
          40 ஓம் கலியுக தெய்வமே போற்றி

          41 ஓம் கார்முகில் வண்ணா போற்றி
          42 ஓம் குன்றம் தாங்கினாய் போற்றி
          43 ஓம் கோவிந்த மூர்த்தி போற்றி
          44 ஓம் கோபியர் லோலா போற்றி
          45 ஓம் கோகுல பாலா போற்றி

          46 ஓம் கோதண்டபாணியே போற்றி
          47 ஓம் சர்வலோக சரண்யா போற்றி
          48 ஓம் சபரிக்கு அருளினாய் போற்றி
          49 ஓம் சகஸ்ரநாம பிரியனே போற்றி
          50 ஓம் சாந்த சொரூபியே போற்றி

          51 ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
          52 ஓம் சங்கரப்பிரியனே போற்றி
          53 ஓம் சங்கு சக்கர தாரியே போற்றி
          54 ஓம் சப்தகிரி வாசனே போற்றி
          55 ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி

          56 ஓம் சீனிவாச பெருமாளே போற்றி
          57 ஓம் சீதேவி நாயகனே போற்றி
          58 ஓம் சுயம்பிரகாசா போற்றி
          59 ஓம் சுந்தர தோளினாய் போற்றி
          60 ஓம் சுந்தரராஜமூர்த்தியே போற்றி

          61 ஓம் செல்வ நாராயணனே போற்றி
          62 ஓம் தசரதன் வாழ்வே போற்றி
          63 ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
          64 ஓம் திருமகள் கேள்வா போற்றி
          65 ஓம் திருவேங்கடவனே போற்றி

          66 ஓம் திருமலை உறைவாய் போற்றி
          67 ஓம் திருத்துழாய் பிரியனே போற்றி
          68 ஓம் துருவனைக் காத்தாய் போற்றி
          69 ஓம் துன்பம் தீர்ப்பவனே போற்றி
          70 ஓம் தேவகி பாலகனே போற்றி

          71 ஓம் தோள்மாலை சூடினாய் போற்றி
          72 ஓம் நந்தகோபாலனே போற்றி
          73 ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
          74 ஓம் நான்முகன் பிதாவே போற்றி
          75 ஓம் பக்தவத்சலனே போற்றி

          76 ஓம் பக்தர் சகாயனே போற்றி
          77 ஓம் பரந்தாமனே போற்றி
          78 ஓம் பத்மநாபனே போற்றி
          79 ஓம் பரம தயாளனே போற்றி
          80 ஓம் பத்மாவதி துணைவா போற்றி

          81 ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
          82 ஓம் பாற்கடல் உறைவாய் போற்றி
          83 ஓம் பார்த்தசாரதியே போற்றி
          84 ஓம் பார் புகழ் தேவா போற்றி
          85 ஓம் பாஞ்சஜன்யம் ஏந்தினாய் போற்றி

          86 ஓம் பாண்டவர் துாதா போற்றி
          87 ஓம் பாஞ்சாலியை காத்தாய் போற்றி
          88 ஓம் பாலாஜி வெங்கடேசா போற்றி
          89 ஓம் பிரகலாதப் பிரியனே போற்றி
          90 ஓம் புருஷோத்தமனே போற்றி

          91 ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
          92 ஓம் புரட்டாசி நாயகா போற்றி
          93 ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
          94 ஓம் மண்மலர் ஏற்றாய் போற்றி
          95 ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி

          96 ஓம் மலையப்ப சுவாமியே போற்றி
          97 ஓம் மாயக் கண்ணனே போற்றி
          98 ஓம் யசோதை கண்மணியே போற்றி
          99 ஓம் ராமானுஜர் வாழ்வே போற்றி
          100 ஓம் வகுளமாலிகா செல்வனே போற்றி

          101 ஓம் விஜய ராகவனே போற்றி
          102 ஓம் வில்லொடித்த வீரா போற்றி
          103 ஓம் விபீஷணன் வாழ்வே போற்றி
          104 ஓம் வெண்ணெயுண்ட வாயா போற்றி
          105 ஓம் வேங்கடத்துறைவா போற்றி

          106 ஓம் வைகுண்டவாசனே போற்றி
          107 ஓம் வையம் காப்பவனே போற்றி
          108 ஓம் நமோ நாராயணனே போற்றி போற்றி

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணாய ----------- ||


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

திங்கள், 12 மார்ச், 2018

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்திர சதநாமாவளி


           01 ஓம் அச்யுதாய நமஹ
           02 ஓம் அதீந்தராய நமஹ
           03 ஓம் அனாதிநிதனாய நமஹ
           04 ஓம் அளிருத்தாய நமஹ
           05 ஓம் அம்ருதாய நமஹ

           06 ஓம் அரவிந்தாய நமஹ
           07 ஓம் அஸ்வத்தாய நமஹ
           08 ஓம் ஆதித்யாய நமஹ
           09 ஓம் ஆதிதேவாய நமஹ
           10 ஓம் ஆனத்தாய நமஹ

           11 ஓம் ஈஸ்வராய நமஹ
           12 ஓம் உபேந்த்ராய நமஹ
           13 ஓம் ஏகஸ்மை நமஹ
           14 ஓம் ஓஸ்தேஜோத்யுதிதராய நமஹ
           15 ஓம் குமுதாய நமஹ

           16 ஓம் க்ருதஜ்ஞாய நமஹ
           17 ஓம் க்ருஷ்ணாய நமஹ
           18 ஓம் கேஸவாய நமஹ
           19 ஓம் ஷேத்ரஜ்ஞாய நமஹ
           20 ஓம் கதாதராய நமஹ

           21 ஓம் கருடத்வஜாய நமஹ
           22 ஓம் கோபதயே நமஹ
           23 ஓம் கோவிந்தாய நமஹ
           24 ஓம் கோவிதாம்பதயே நமஹ
           25 ஓம் சதுர்ப்புஜாய நமஹ

           26 ஓம் சதுர்வ்யூஹாய நமஹ
           27 ஓம் ஜனார்த்தனாய நமஹ
           28 ஓம் ஜ்யேஷ்ட்டாய நமஹ
           29 ஓம் ஜ்யோதிராதித்யாய நமஹ
           30 ஓம் ஜயோதிஷே நமஹ

           31 ஓம் தாராய நமஹ
           32 ஓம் தமனாய நமஹ
           33 ஓம் தாமோதராய நமஹ
           34 ஓம் தீப்தமூர்த்தயே நமஹ
           35 ஓம் துஸ்வப்ன நாஸனாய நமஹ

           36 ஓம் தேவகீநந்தனாய நமஹ
           37 ஓம் தனஞ்ஜயாய நமஹ
           38 ஓம் நந்தினே நமஹ
           39 ஓம் நாராயணாய நமஹ
           40 ஓம் நாரஸிம்ஹவபுஷே நமஹ

           41 ஓம் பத்மநாபாய நமஹ
           42 ஓம் பத்மினே நமஹ
           43 ஓம் பரமேஸ்வராய நமஹ
           44 ஓம் பவித்ராய நமஹ
           45 ஓம் ப்ரத்யும்னாய நமஹ

           46 ஓம் ப்ரணவாய நமஹ
           47 ஓம் புரந்தராய நமஹ
           48 ஓம் புருஷாய நமஹ
           49 ஓம் புண்டரீகாக்ஷய நமஹ
           50 ஓம் ப்ருஹத்ரூபாய நமஹ

           51 ஓம் பக்தவத்ஸலாய நமஹ
           52 ஓம் பகவதே நமஹ
           53 ஓம் மதுஸூதனாய நமஹ
           54 ஓம் மஹாதேவாய நமஹ
           55 ஓம் மஹாமாயாய நமஹ

           56 ஓம் மாதவாய நமஹ
           57 ஓம் முக்தானாம் பரமாகதயே நமஹ
           58 ஓம் முகுந்தாய நமஹ
           59 ஓம் யக்ஞகுஹ்யாய நமஹ
           60 ஓம் யஜ்ஞபதயே நமஹ

           61 ஓம் யஜ்ஞாஜ்ஞாய நமஹ
           62 ஓம் யஜ்ஞாய நமஹ
           63 ஓம் ராமாய நமஹ
           64 ஓம் லக்ஷ்மீபதே நமஹ
           65 ஓம் லோகாத்யக்ஷய நமஹ

           66 ஓம் லோஹிதாக்ஷய நமஹ
           67 ஓம் வரதாய நமஹ
           68 ஓம் வர்த்தனாய நமஹ
           69 ஓம் வராரோஹாய நமஹ
           70 ஓம் வஸுப்ரதாய நமஹ

           71 ஓம் வஸுமனஸே நமஹ
           72 ஓம் வ்யக்திரூபாய நமஹ
           73 ஓம் வாமனாய நமஹ
           74 ஓம் வாயுவாஹனாய நமஹ
           75 ஓம் விக்ரமாய நமஹ

           76 ஓம் விஷ்ணவே நமஹ
           77 ஓம் விஷ்வக்ஸேனாய நமஹ
           78 ஓம் வ்ருஷாதராய நமஹ
           79 ஓம் வேதவிதே நமஹ
           80 ஓம் வேதாங்காய நமஹ

           81 ஓம் வேதாய நமஹ
           82 ஓம் வைகுண்டாய நமஹ
           83 ஓம் ஸரணாய நமஹ
           84 ஓம் ஸாந்நாய நமஹ
           85 ஓம் ஸார்ங்கதன்வனே நமஹ

           86 ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நமஹ
           87 ஓம் ஸிகண்டனே நமஹ
           88 ஓம் ஸிவாய நமஹ
           89 ஓம் ஸ்ரீதராய நமஹ
           90 ஓம் ஸ்ரீநிவாஸாய நமஹ

           91 ஓம் ஸ்ரீமதே நமஹ
           92 ஓம் ஸுபாங்காய நமஹ
           93 ஓம் ஸ்ருதிஸாகராய நமஹ
           94 ஓம் ஸங்கர்ஷணாய நமஹ
           95 ஓம் ஸதாயோகினே நமஹ

           96 ஓம் ஸர்வதோமுகாய நமஹ
           97 ஓம் ஸர்வேஸ்வராய நமஹ
           98 ஓம் ஸஹஸ்ராக்ஷய நமஹ
           99 ஓம் ஸ்கந்தாய நமஹ
           100 ஓம் ஸாக்ஷிணே நமஹ

           101 ஓம் ஸுதர்ஸனாய நமஹ
           102 ஓம் ஸுரானந்தாய நமஹ
           103 ஓம் ஸுலபாய நமஹ
           104 ஓம் ஸூக்ஷ்மாய நமஹ
           105 ஓம் ஹரயே நமஹ

           106 ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ
           107 ஓம் ஹிரண்யநாபாய நமஹ
           108 ஓம் ஹ்ருஷீகேஸாய நமஹ


தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்



|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணாய ----------- ||